\
முடக்கத்திற்கு பின் சீரானது யூடியூப், ஜிமெயில்

முடக்கத்திற்கு பின் சீரானது யூடியூப், ஜிமெயில்

முடக்கத்திற்கு பின் சீரானது யூடியூப், ஜிமெயில்
Published on: 

சர்வர் பிரச்னை காரணமாக சில நிமிடங்கள் முடங்கிய கூகுள் நிறுவனத்தின் யுடியூப், ஜிமெயில் ஆகியவை சீரானது.

பிரபல இணையதளமான கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் உலகம் முழுவதும் முடங்கியது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ், யூ டியூப், கூகுள் மீட், ஜிமெயில் ஆகியவை இன்று மாலை முடங்கின. இதனை அடுத்து #GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஸ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. ஏதேனும் சர்வர் பிரச்னை காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என பலரும் பதிவிட்டனர்.

இந்நிலையில், பிரச்னைகளை சரி செய்து வருகிறோம் என கூகுள் விளக்கமளித்த நிலையில், முடங்கிய சுமார் அரை மணி நேரத்திலேயே யூடியூப், ஜிமெயில் ஆகியவை மீண்டும் செயல்பட தொடங்கியது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com