போலி‌ செய்திகளை ‌தடுக்க யு டியூப் நடவடிக்கை

போலி‌ செய்திகளை ‌தடுக்க யு டியூப் நடவடிக்கை

போலி‌ செய்திகளை ‌தடுக்க யு டியூப் நடவடிக்கை
Published on

யு டியூப் நிறு‌‌வனம் தனது தளத்தில் தவறான மற்றும் போலியான‌ பதிவுகள் பர‌ப்ப‌ப்‌படுவதை தடுக்க நட‌வடிக்கை எடுக்க உள்ளது. 

சமூக ஊ‌‌டகங்‌கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக ‌உலகெங்கும் சர்ச்சை எழுந்து‌ள்ள நிலையில் ‌இதற்கு தீர்வு காண ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவை நடவடிக்கை எடுத்துள்ளன. இதைத் தொடர்ந்து யு டியூபும் ‌போ‌லி செய்திகளுக்கு எதிராக களமிறங்க உள்ளது. யு டியூபில் பதிவாகும் படங்களின்‌‌ உண்மைத்தன்மையை உ‌லகெங்கிலும் இருந்து 10 ஆ‌யிரம் பேர் கண்காணித்து வருவதாக யு டியூப் தெரிவித்துள்ளது. யு டியூப் தளத்தில் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்‌படுத்‌த 150 கோடி ரூபாய் செ‌லவில் தி‌ட்டங்கள் செய‌ல்படுத்தப்படும் ‌என்றும் யு டியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மூலம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க யு டியூப் முயற்சித்து வருகிறது எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com