ஊரடங்கு மீறலால் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் : மனமுடைந்து தீக்குளித்த இளைஞர்...!

ஊரடங்கு மீறலால் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் : மனமுடைந்து தீக்குளித்த இளைஞர்...!
ஊரடங்கு மீறலால் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்  : மனமுடைந்து தீக்குளித்த இளைஞர்...!

ஊரடங்கு உத்தரவை மீறியதால் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் அதனை ஓட்டி வந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய் பரவலைத் தடுக்க கடந்த மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து 5 நபர்களுக்கு மேல், வெளியில் கூட தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவையை மீறி வெளியே வருபவர்களின் வாகனத்தில் மஞ்சள் சாயம் பூசுவது, வாகனத்தை சைட் லாக் பண்ணிவிட்டு எட்டுப் போடச் சொல்வது எனப் பல நூதன தண்டனைகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்தும் ஊரடங்கை மீறுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தமிழகத்தை பொருத்தவரை, ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 2, 11, 467 வாகனஙக்ள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சூரியநெல்லியில் போலீசார் 144 தடை உத்தரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் தடை உத்தரவை மீறி வெளியே வந்த சின்னக்கானல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற 24 வயது வாலிபரிடம் இருந்து போலீசார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த அந்த வாலிபர் நேற்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 75 சதவீத தீக்காயங்களுடன் கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சாந்தம்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com