கர்நாடகா: வாயில் விஷம் ஊற்றி இளம்பெண் கொலை; திருமணத்துக்கு மறுத்ததால் தாய்மாமன் செய்த கொடூரம்!

கர்நாடகாவில் திருமணம் செய்ய மறுத்த, இளம்பெண்ணை விஷம் வைத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 உயிரிழந்த தீபா
உயிரிழந்த தீபா PT WEB

கர்நாடக மாநிலம், ஹாவேரி ஹனகல் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா. இவரது மகள் தீபா (21), இவருக்கும், உறவு முறை தாய்மாமன் மால்தேஷ் (35) என்பவருக்கும், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகின்ற ஏப்ரல் 22ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. மால்தேஷை திருமணம் செய்வதில் தீபாவுக்கு விருப்பம் இல்லை எனத் தெரிகிறது. இது குறித்து மால்தேஷிடம், தீபா கூறியுள்ளார். அதற்கு மால்தேஷ் "என்னை திருமணம் செய்தே ஆக வேண்டும்" என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில், தீபா தூக்கில் சடலமாகத் தொங்கினார். தற்கொலை செய்ததாக, குடும்பத்தினர் நினைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் தீபாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

 உயிரிழந்த தீபாவுடன்  மால்தேஷ்
உயிரிழந்த தீபாவுடன் மால்தேஷ்

விசாரணையில், தீபா மால்தேஷிடம் "எனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் கூறியதால் ஒப்புக்கொண்டேன். திருமணம் செய்தாலும், உன்னுடன் குடும்பம் நடத்த மாட்டேன்” எனத் தீபா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மால்தேஷ் தீபாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மால்தேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com