\
''உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்'' - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

''உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்'' - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

''உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்'' - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
Published on

மான் கீ பாத்தில் பேசுவது குறித்த திட்டங்களை மக்களே தெரிவிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடையே மான் கீ பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். அந்தந்த மாதங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும், முக்கிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடி இந்த ரேடியோ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் மான் கீ பாத்தில் பேசுவது குறித்த திட்டங்களை மக்களே தெரிவிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், உங்கள் கருத்துகள் எப்போதுமே மான் கீ பாத்-ன் பலம். 130 கோடி இந்தியர்களின் பலத்தை வெளிப்படுத்தும் ஒரு துடிப்பான தளமாக இது இருக்கும். உங்கள் கருத்துகளை 1800-11-7800 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். அல்லது, NaMo Ap, MyGov Open Forum ஆகிய வலைதளங்களுக்குச் சென்று பதிவிடலாம் என தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com