இந்தியா
இணை நோய் இல்லாத 28 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு
இணை நோய் இல்லாத 28 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் இணைநோய்கள் ஏதும் இல்லாத நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்த இரண்டாம் அலையில் இளைஞர்கள் மற்றும் சிறார்களும் அதிக அளவில் உருமாற்றமடைந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் இணைநோய்கள் ஏதும் இல்லாத நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும் சிகிச்சைபெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 4 பேர் உயிரிழந்தனர்.
12 வயதிற்குட்பட்ட 406 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 5 ஆம் தேதி 128 சிறார்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் தொடர்ந்து சிறார்களுக்கு அதிகரித்துள்ளது.