தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் குடிபோதையில் கண்டெக்டரை தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஹயாத் நகர் பஸ் டிப்போவில் இருந்து புறப்பட்ட பேருந்தில் பலரும் பயணம் செய்தனர்.
அப்போது குடிபோதையில் இருந்த இளம்பெண் ஒருவர், 10 ரூபாய் டிக்கெட்டிற்கு 500 ரூபாயை கொடுத்துள்ளார். ‘சில்லறை இல்லையா’ என்று கேட்ட கண்டெக்டர், சரி இருக்கட்டும் என்று 490 ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார்
இதற்கிடையே, ஆத்திரமடைந்த அப்பெண், கண்டெக்டரை திட்டிக்கொண்டே அவரை தாக்கத்தொடங்கினார். இதற்கு பெரிதாக எதிர்வினையாற்றாத கண்டெக்டர் நிதானத்தை கடைபிடித்த நிலையில், அவரை எட்டி உதைத்தார் இளம்பெண்.
ஆபாசமாக திட்டியும், விடிவதற்குள் உன்னை கொன்றுவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தும் செயல்பட்ட அப்பெண், அவர் மீது எச்சிலையும் உமிழ்ந்து அவமதித்து சென்றுள்ளார். ஓடும் பேருந்தில் கண்டெக்டரை கடுமையாக தாக்கிய இளம்பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கிடையே, தகவலறிந்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை செய்து வருகின்றனர்.