young soldier dies trying to save fellow soldier tragedy 6 months into service
சிக்கிம்எக்ஸ் தளம்

சக வீரரை காப்பாற்ற ஆற்றில் குதித்த ராணுவ வீரர்.. பணியில் சேர்ந்த 6 மாதத்தில் சோகம்!

சிக்கிமில் ஆற்றில் விழுந்த சக ராணுவ வீரரை காப்பாற்ற முயன்றபோது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு இளம் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
Published on

சிக்கிம் சாரணர் படையைச் சேர்ந்த 23 வயதான லெப்டினென்ட் சஷாங்க் திவாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் பணியில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில் ஒரு மரப் பாலத்தைக் கடக்கும்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் கால் தவறி ஆற்றில் விழுந்தார். பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பா மலை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டார்.

நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சுப்பாவை காப்பாற்ற லெப்டினென்ட் சஷாங்க் திவாரி தண்ணீரில் குதித்தார். மற்றொரு சிப்பாய் நாயக் காட்டேலும் குதித்தார். அவர்கள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த அக்னிவீரை மீட்டனர். சுப்பா பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டபோதும், லெப்டினென்ட் சஷாங்க் திவாரி பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 800 மீட்டர் கீழ்நோக்கிக் கண்டெடுக்கப்பட்டது.

அவரது இளம் வயது மற்றும் குறுகிய சேவை வரவிருக்கும் தலைமுறை வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது, ”அவரது துணிச்சலும் கடமைக்கான அர்ப்பணிப்பும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த துயரமான நேரத்தில் இந்திய ராணுவம் அவரது குடும்பத்தினருடன் தோளோடு தோள் நிற்கிறது” எனப் பதிவிட்டுள்ளது.

young soldier dies trying to save fellow soldier tragedy 6 months into service
’நாட்டுக்காக உயிர்நீத்தது பெருமை..’ - ராஜஸ்தானில் வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மனைவி உருக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com