12வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம் இசைக்கலைஞர்

12வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம் இசைக்கலைஞர்

12வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம் இசைக்கலைஞர்
Published on

பெங்களூரை சேர்ந்த இசைக்கலைஞர் கரண் ஜோசப். இவர் மும்பையில் செய்துகொண்ட தற்கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரண் ஜோசப்புக்கு 29 வயதுதான் ஆகிறது.தனது 5 வயதில் இருந்து ப்யானோ இசைத்து வருகிறார். இவர் பெங்களூர் ஸ்கூல் ஆப் மியூசிக், ராயல் ஸ்கூல் ஆப் மியூசிக், ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக், அமெரிக்காவில் உள்ள பெர்க்லீ காலேஜ் ஆப் மியூசிக்கில் இசைப் பயின்றவர்.

இசைத்துறையில் பெரிய சாதனை செய்ய வேண்டும் எனும் விருப்பத்தில் மும்பைக்கு குடிப்பெயர்ந்தார்.  அங்கு அவரது நண்பர் ரிஷி ஷாவுடன் சேர்ந்து மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள கன்கார்ட் அடுக்குடுமாடி குடியிருப்பில் கடந்த ஒரு மாதமாக வசித்து வந்தார்.
சனிக்கிழமை காலை நண்பர்களுடன் சேர்ந்து டிவி பார்த்துள்ளார் கரண். திடீர் என்று அவர் ஜன்னல் அருகே சென்று கீழே குதித்துவிட்டார். உடனே அவரது நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கரணை உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் எதற்காக இந்த முடிவு எடுத்தார் எனத் தெரியவில்லை

கரணின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரண் பிரபல பாடகர் விஷால் டட்லானியின் இசைக்குழுவில் பணியாற்றுள்ளார். கரணின் மரணம் குறித்து அறிந்த விஷால் அதிர்ச்சி அடைந்துள்ளார். கரண் ஒரு ஜீனியஸ் என்று தெரிவித்துள்ளார் விஷால்.

கரண் சனிக்கிழமை காலை 5. 40 மணிக்கு தன்னை அடித்து நொறுக்குகிறார்கள் என்றும், தன்னை காப்பாற்றுமாறும் நண்பர் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com