முடிதிருத்தும் கடைக்கு வந்த சிறுவனுக்கு ஆபாச வீடியோ காட்டி டார்ச்சர்..குமுளியில் அதிர்ச்சி

முடிதிருத்தும் கடைக்கு வந்த சிறுவனுக்கு ஆபாச வீடியோ காட்டி டார்ச்சர்..குமுளியில் அதிர்ச்சி
முடிதிருத்தும் கடைக்கு வந்த சிறுவனுக்கு ஆபாச வீடியோ காட்டி டார்ச்சர்..குமுளியில் அதிர்ச்சி

முடிதிருத்த கடைக்கு வந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த 38 வயது வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜீவ். 38 வயதான இந்த வாலிபர் குமுளியில் முடிதிருத்தும் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு முடிதிருத்தம் செய்ய அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் வந்துள்ளான். முடி திருத்தம் செய்து கொண்டிருந்தபோது சிறுவனிடம் பேச்சுக் கொடுத்த ராஜீவ் சிறுவனின் வீட்டில் அவனது பெற்றோர் தினக்கூலி வேலைக்கு சென்றதை உறுதி செய்து கொண்டுள்ளார்.

சிறுவனுக்கு முடிதிருத்தம் செய்து முடித்தபின், மழை வருவதாகவும் தனது இரு சக்கர வாகனத்திலேயே வீட்டில் இறக்கி விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். அதற்கு சிறுவன் சம்மதிக்கேவே அவனை தனது பைக்கில் ஏற்றி சிறுவனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் இறக்கி விட்டதும் சிறுவனோடு ராஜீவும் சிறுவனின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கு ராஜீவ் தனது மொபைல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை சிறுவனிடம் காட்டி வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுவன் சத்தம் போடவே பயந்துபோன ராஜீவ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டவும் செய்துள்ளார்.

கூலி வேலைக்குச் சென்ற பெற்றோர் பெற்றோர் வீடு திரும்பியதும் அவர்களிடம் சிறுவன் நடந்ததைக் கூறியுள்ளான். இது குறித்து சிறுவனின் பெற்றோர் கேரள குமுளி காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஜோபின் ஆண்டனி தலைமையிலான குழுவினர், ராஜீவை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பீருமேடு சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com