உ.பி: 2 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட காதலியின் எலும்புக்கூடு - காதலன் கைது

உ.பி: 2 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட காதலியின் எலும்புக்கூடு - காதலன் கைது

உ.பி: 2 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட காதலியின் எலும்புக்கூடு - காதலன் கைது
Published on

உத்தர பிரதேசத்தில் காதலியைக் கொன்று தனது அறைக்குள்ளேயே புதைத்து மறைத்த காதலனை 2 வருடங்களுக்குப் பின்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்திலுள்ள கிதாவுத் கிராமத்தைச் சேர்ந்தவர் பிக்ராம் சிங். இவருடைய 20 வயது மகள் குஷ்பு காணாமல் போய்விட்டதாக நவம்பர் 20, 2020 அன்று பிக்ராம் சிங் போலீசில் புகார் அளித்திருந்தார்.

புகாரில் பேரில் விசாரணை நடத்திய போலீசார் குஷ்புவின் காதலன் கௌரவின் மீது இந்திய சட்டப்பிரிவுகளான 363(கடத்தல்), 366 (கடத்தல், கடத்தல் அல்லது ஒரு பெண்ணை திருமணத்திற்கு கட்டாயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கௌரவ் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கௌரவை தேடிவந்த போலீசார் சனிக்கிழமை அவரை கண்டுபிடித்து கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. குஷ்பு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியன்பேரில், நவம்பர் 21ஆம் தேதி குஷ்புவிற்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாகவும், குஷ்புவின் உடைமைகளுடன் உடலை தனது வீட்டிலுள்ள ஒரு அறையில் புதைத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார் கௌரவ். மேலும் இதனைத் தொடர்ந்து தனது குடும்பத்துடன் ஊரைவிட்டே ஓடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

கௌரவின் வாக்குமூலத்தை அடுத்து, போலீசார் அவரது வீட்டில் குஷ்புவை புதைத்த இடத்தை தோண்டியபோது, அங்கிருந்து எலும்புக்கூடு மற்றும் குஷ்புவின் சில உடைமைகளையும் மீட்டுள்ளனர். இதனையடுத்து கௌரவ் மற்றும அவரது தந்தை முன்னாலால் மீது இந்திய சட்டப்பிரிவு 302இன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com