சத்தீஸ்கர்: வேலையின்மை, கடன் தொல்லை; கடிதம் எழுதிவிட்டு இளம்தம்பதி எடுத்த விபரீத முடிவு

சத்தீஸ்கர்: வேலையின்மை, கடன் தொல்லை; கடிதம் எழுதிவிட்டு இளம்தம்பதி எடுத்த விபரீத முடிவு

சத்தீஸ்கர்: வேலையின்மை, கடன் தொல்லை; கடிதம் எழுதிவிட்டு இளம்தம்பதி எடுத்த விபரீத முடிவு
Published on

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் கடன் தொல்லையில் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்திலுள்ள ஜான்ஜிகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுஷில் யாதவ்(35) - அனிதா(33) தம்பதியர். கூட்டுக்குடும்பத்தில் வசித்துவந்த சுஷிலுக்கு கடந்த ஒரு வருடமாக வேலையில்லாததால் அவருடைய சகோதரர் குடும்பத்திற்கும் இவர்களுக்கும் அடிக்கடி சச்சரவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதிலுள்ள பழைய ஃபிலை டவுனில் சுஷில் குடும்பம் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து அவர் போலீசாருக்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது வேலையின்மை மற்றும் கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக எழுதிவைத்த கடிதம் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com