இந்தியா
கர்நாடகா: கொரோனாவால் இறப்போர் சடலங்களை அடக்கம் செய்யும் இரு இளம் பெண்கள்!
கர்நாடகா: கொரோனாவால் இறப்போர் சடலங்களை அடக்கம் செய்யும் இரு இளம் பெண்கள்!
கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் பணியில் இரு இளம் பெண்கள் ஈடுபட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், உயிரிழப்புகளும் உயர்ந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பெங்களூருவை சேர்ந்த இரு இளம் பெண்கள் முன்வந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் ஒட்டுமொத்த குடும்பமும் ஈடுபட்டிருக்கும் நிலையில், உயிருக்கு அஞ்சி வீட்டிலேயே முடங்கி கிடக்க மனம் இல்லாததால், சடலங்களை அடக்கம் செய்யும் சேவையில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.