போன் செய்தால் போதும்... வீட்டுக்கே வரும் பெட்ரோல்..!

போன் செய்தால் போதும்... வீட்டுக்கே வரும் பெட்ரோல்..!

போன் செய்தால் போதும்... வீட்டுக்கே வரும் பெட்ரோல்..!
Published on

’மை பெட்ரோல் பம்ப்’ எனும் பெயரில் ANB ஃபூயல்ஸ் பிரைவேட் லிமிடெட் நுகர்வோர் பிராண்ட் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் பெட்ரோலை விநியோகிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெட்ரோல் பங்க்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து நேரத்தை வீணடித்து வண்டிகளில் பெட்ரோல் நிரப்புவதற்குள் நம் பெறும் அவஸ்தயை வார்த்தைகளால் சொல்லமுடியாது. இந்த சிரமத்தைத் தவிர்க்க  பெங்களூரு (கோராமங்க்லா, பெல்லண்டூர், பி.எம்.டி. & பெளமஹால்லி) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெட்ரோலை டோர் டெலிவரி செய்யும் சேவை தற்போது செயல்படுகிறது. விரைவில் மற்ற இடங்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என ANB ஃபூயல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Www.mypetrolpump.com எனும் இணையதளத்தில் ஆர்டர் செய்வதன் மூலம் பெட்ரோலை நம் வீட்டிற்கே வரவைக்கலாம். மேலும் 7880504050 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெட்ரோலை ஆர்டர் செய்யலாம். விரைவில் ஸ்மார்ட்போனில் பெட்ரோலை ஆர்டர் செய்ய புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக இந்த சேவையின் மூலம் 20 லிட்டர் பெட்ரோல் ஆர்டர் செய்ய முடியுமாம். லிட்டருக்கு ரூ.1 வீதம் டெலிவரி சார்ஜ் வசூலிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு 99 லிட்டர் பெட்ரோல் ஆர்டர் செய்தால் அதற்கான டோர் டெலிவரி சார்ஜஸ் ரூ.99. கிரிடிட் கார்டு மூலமாகவும் இதற்கான கட்டணத்தை செலுத்தலாம்.   

முன்னதாக,  முன்பதிவு செய்தால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை வீடு தேடி டெலிவரி செய்வது பற்றி பரிசீலித்து வருவதாக பெட்ரோலிய அமைச்சகம் அதன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com