ஃபோனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு நீங்களும் நிதியுதவி அளிக்கலாம் !

ஃபோனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு நீங்களும் நிதியுதவி அளிக்கலாம் !
ஃபோனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு நீங்களும் நிதியுதவி அளிக்கலாம் !

ஃபோனி புயல் ருத்ரதாண்டவம் ஆடி ஒடிஷாவை புரட்டி போட்டுள்ளது. புயலின் கோரதாண்டவத்தால் ஒடிசாவே உருமாறிக்கிடக்கிறது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீட்புப்பணியில் துரிதம் காட்டி வருகின்றன. ஒடிஷா அரசு, புயலை சரியாக கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் உயிர்ச் சேதத்தை பெருமளவு குறைத்துள்ளது. இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபோனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு, விரும்பினால் நீங்களும் நிதியுதவி அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதவ விரும்புவோர் ஒடிசா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு, பண உதவி வழங்கலாம்.

இணையதள முகவரி
www.cmrfodisha.gov.in

வங்கிக் கணக்கு விவரம்

Account: Odisha Chief Minister's Relief Fund
Account Number: 006101057842
IFSC Code: ICIC0000061
UPI VPA- *ODISHACMRF.FANI@ICICI*

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com