\
சமாஜ்வாதி பெயரை நீக்க முடிவு: யோகி அதிரடி

சமாஜ்வாதி பெயரை நீக்க முடிவு: யோகி அதிரடி

சமாஜ்வாதி பெயரை நீக்க முடிவு: யோகி அதிரடி
Published on: 

உத்தரப்பிரதேசத்தில் முந்தைய சமாஜ்வாதி அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை கைவிட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது.

முந்தைய சமாஜ்வாதி அரசின் அனைவருக்கும் இலவச ஸ்மார்ட் போன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைக் கைவிடப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அரசு திட்டங்களில் உள்ள சமாஜ்வாதி என்ற பெயரை நீக்க யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்திருந்தது. உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதாவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பதவி ஏற்று ஒரு மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு திட்டங்களை தற்போதைய அரசு மாற்றி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com