“நீண்டநாள் கனவு நிறைவேறியிருக்கிறது” - ராமர் கோயில் குறித்து யோகி ஆதித்யநாத்

“நீண்டநாள் கனவு நிறைவேறியிருக்கிறது” - ராமர் கோயில் குறித்து யோகி ஆதித்யநாத்
“நீண்டநாள் கனவு நிறைவேறியிருக்கிறது” - ராமர் கோயில் குறித்து யோகி ஆதித்யநாத்

ராமர் கோயில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்று முடிந்தது. இதற்காக ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்ற பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு அளித்தார். பின்னர், ஹனுமன் கோயிலில் மோடி தரிசனம் செய்தார். தொடர்ந்து குழந்தை ராமர் கோயிலில் பாரிஜாத மலர் செடியை நட்டு வைத்தார்.

இதையடுத்து ராமர் கோயில் பூமி பூஜை விழாவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “ராமர் கோயில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது. ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகள் காத்திருந்தோம். ” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com