இந்தியா
கொரோனா தாக்கம் குறைய ருத்ராபிஷேக பூஜை செய்த உ.பி. முதல்வர் யோகி!
கொரோனா தாக்கம் குறைய ருத்ராபிஷேக பூஜை செய்த உ.பி. முதல்வர் யோகி!
உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ருத்ராபிஷேக பூஜையில் ஈடுபட்டார்.
கொரோனாவின் இரண்டாவது அலையில் மிகவும் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் ஒன்று. காசியாபாத், நொய்டா, லக்னோ, மீரட் உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்ய வசதியின்றி சாலையிலும், பொதுவெளிகளிலும் உடல்களை எரிக்கும் அவலம் நடந்து வருகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சிவாலயம் ஒன்றில் வழிபாடு நடத்திய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சிவலிங்கத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ருத்ராபிஷேகம் பூஜை எனப்படும் சிவலிங்கத்திற்கு பால் ஊற்றி வணங்கும் சிறப்பு பூஜையை மேற்கொண்டார்.