\
உ.பி: ரவுடிகள் சுட்டதில் உயிரிழந்த 8 போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி

உ.பி: ரவுடிகள் சுட்டதில் உயிரிழந்த 8 போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி

உ.பி: ரவுடிகள் சுட்டதில் உயிரிழந்த 8 போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி
Published on: 

உத்திரபிரதேசத்தில் ரவுடிகளுடனான மோதலில் உயிரிழந்த 8 காவல்துறையினரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி நிவாணத் தொகை வழங்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளின் அராஜகம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கான்பூரில் ரவுடி கும்பல் ஒன்றைச் சுற்றி வளைத்தபோது போலீசார் மீது ரவுடி கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், உயிரிழந்த 8 காவல்துறையினரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி நிதியுதவி வழங்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com