முத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்

முத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்
முத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்

முத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.6000 உதவி தொகை வழங்க இருப்பதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் அறிவித்துள்ளார்.

முத்தலாக் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை லக்னோவில் நேற்று சந்தித்து பேசிய அவர் பேசும்போது, "முத்தலாக் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வருடம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க இருக்கிறது. அவர்கள் மறுவாழ்வு பெறும்வரை இந்த உதவி தொகை வழங்கப்படும். இலவச சட்ட உதவியும் வழங்க இருக்கிறோம். பல்வேறு திட்டங்களின் கீழ் அவர்களுக்கு தங்குமிடமும் கல்வியும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


முத்தலாக் விவகாரத்தில் போலீசார் தங்கள் கடமையை செய்ய தவறினால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஆண்களும் தப்பிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்’’ என்ற ஆதித்யாநாத், முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களை தயாரிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com