மின்னல் தாக்கி பலியானவர்களுக்கு ரூ.4லட்சம் நிவாரணம்

மின்னல் தாக்கி பலியானவர்களுக்கு ரூ.4லட்சம் நிவாரணம்

மின்னல் தாக்கி பலியானவர்களுக்கு ரூ.4லட்சம் நிவாரணம்
Published on


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் மாநிலங்களின் பல பகுதிகளில் ஓடும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர், அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர்.
மேலும், பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரும், மாநில போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது என பிரதமர் மோடி உள்பட முக்கிய அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி பலர் உயிரிழந்தனர். இதைதடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு, தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல் அமைச்சர் யோகி ஆதித்யாநாத் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com