கோரக்பூர் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி

கோரக்பூர் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி
கோரக்பூர் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் தனது தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

403 தொகுதிகளைக்கொண்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கு ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆட்சியைப் பிடிக்க 202 தொகுதிகள் தேவை என்ற நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 250க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இதனால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்கவைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா அரசு தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியிருந்ததை உறுதி செய்யும் வகையிலேயே முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன.

முதல்வர் வேட்பாளரான யோகி ஆதித்யநாத், தான் நின்ற கோரக்பூர் தொகுதியில் 92,844 வாக்குகள் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தொகுதியில் மொத்த வாக்குகள் 1,50,934 என்றிருந்த நிலையில், அதில் 64.29% பேர் யோகி ஆதித்யநாத்துக்கு வாக்களித்துள்ளனர். அவரை அத்தொகுதியில் எதிர்த்து நின்ற 13 வேட்பாளர்களில், இருவர் மட்டுமே நான்கு இலக்கத்தில் வாக்கு பெற்றிருக்கிறார்கள். மற்ற அனைவரும் மூன்று, இரண்டு இலக்க வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com