சித்தாள் வேலை பார்க்கிறார் யோகாவில் தங்கம் வென்ற வீராங்கனை

சித்தாள் வேலை பார்க்கிறார் யோகாவில் தங்கம் வென்ற வீராங்கனை
சித்தாள் வேலை பார்க்கிறார் யோகாவில் தங்கம் வென்ற வீராங்கனை

யோகா ஆசிரியர்களிள் தேவை அதிகரித்திருக்கிறது என்கிற ஆய்வுத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவுக்காக சர்வதேச யோகா போட்டிகளில் மூன்று தங்கம் வென்ற 19 வயது வீராங்கனை தாமினி சாஹூ கடனை அடைப்பதற்காக சித்தாள் வேலை செய்துவருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

பாஜக ஆட்சியில் இருக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் தாமினி சாஹூ. ராய்ப்பூர் அருகேயுள்ள தாரா கிராமத்தைச் சேர்ந்த தாமினி, மிகச் சிறந்த யோகா வீராங்கனை. நேபாள் நாட்டில் மே மாதம் நடந்த தெற்காசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று, இந்தியாவுக்காக தங்கம் வென்றவர்.

நேபாளத்துக்குச் செல்ல கையில் பணம் இல்லாத நிலையில், 2% வட்டிக்கு கடன் வாங்கி போட்டியில் பங்கேற்றிருக்கிறார். நாடு திரும்பிய பின்னர் கடனை அடைப்பதற்காக தாயுடன் சேர்த்து சித்தாள் வேலை பார்ப்பதாக பிரபல ஆங்கில இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

தாமினியின் தந்தை, மாற்றுத்திறனாளி. பலூன் விற்று சொற்ப வருமானம் ஈட்டுபவர். தற்போது, பி.காம் முதலாம் ஆண்டு படித்துவரும் தாமினியின் சொந்த ஊரைச் சேர்ந்த அஜய் சந்த்ராகர், சட்டீஸ்கர் மாநில உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கிறார். ”அமைச்சர் அஜய் சந்த்ராகரிடம் வேண்டுகோள் வைத்தும், தனக்கு வேண்டிய உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை” என்று தாமினி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com