இந்தியா
‘லேண்டர் விக்ரமிலிருந்து எந்தத் தகவலும் இல்லை’ - இஸ்ரோ
‘லேண்டர் விக்ரமிலிருந்து எந்தத் தகவலும் இல்லை’ - இஸ்ரோ
விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கண்டுபிடித்தாலும் இதுவரை எந்தத் தகவலும் லேண்டரில் இருந்து கிடைக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-2 திட்டத்தின் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு கடந்த சனிக்கிழமை துண்டிக்கப்பட்டது. லேண்டர் நிலவில் தரையிறங்குவதை காண இந்தியாவே காத்திருந்த நிலையில் அது நிறைவேறாமல் போனது. இதனிடையே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், இருக்கும் இடம் தெரிய வந்திருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நிலவின் மேற்பரப்பில் லேண்டர் இருப்பதை ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுவரை எந்தத் தகவலும் லேண்டரிலிருந்து கிடைக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனாலும் லேண்டர் தொடர்பை பெற தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.