\
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா
Published on
இன்று மாலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கிறார் எடியூரப்பா.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார் எடியூரப்பா. முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. ஜூலை 16 அன்று டெல்லி சென்றிருந்த எடியூரப்பா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார்.
கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதலமைச்சர் பதவியை பாஜக மேலிடம் வழங்கியது.
அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். அதன்படி எடியூரப்பா முதலமைச்சர் பதவி ஏற்று இன்றுடன் (திங்கட்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com