\
மாலை 6 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் எடியூரப்பா

மாலை 6 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் எடியூரப்பா

மாலை 6 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் எடியூரப்பா
Published on: 

கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளார்.

கர்நாடகாவில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், முதலமைச்சராக இருந்த குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெப்பு கோரினார். 6 நாட்கள் நடந்த விவாதத்துக்குப் பிறகு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 99 வாக்குகளே பெற்றதால் அரசு கவிழ்ந்தது. 

இதைத்தொடர்ந்து சுயேச்சை எம்எல்ஏ சங்கர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜர்க்கிஹோலி, மகேஷ் கும்தஹள்ளி ஆகியோரை அவர்களின் பதவிக்காலம் முடியும் வரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் எதிர்கட்சித் தலைவர் எடியூரப்பா இன்று உரிமை கோரினார். இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com