இந்தியா
யமுனை மாசடைவதற்கு ஹரியானா, உ.பி தொழிற்சாலை கழிவுகள்தான் காரணம் - டெல்லி அமைச்சர்
யமுனை மாசடைவதற்கு ஹரியானா, உ.பி தொழிற்சாலை கழிவுகள்தான் காரணம் - டெல்லி அமைச்சர்
இந்தியாவின் புனித நதிகளாகக் கருதப்படும் கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள் மக்களாலும் தொழிற்சாலைக் கழிவுகளாலும் நாளுக்கு நாள் மாசடைந்துவருகின்றன. அவ்வப்போது தூய்மைப்பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன.
இந்த நிலையில், “யமுனை நதி மாசடைவதற்குக் காரணம் ஹரியானாவில் பத்ஷாபூர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாஹிதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து வரும் தொழிற்சாலைக் கழிவுகள்தான்” என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குற்றம்சாட்டியுள்ளார்.
“அடுத்துவரும் நான்கைந்து ஆண்டுகளுக்கு யமுனையை சுத்தம் செய்யும் பணியைச் செய்யவுள்ளோம். டெல்லியில் ஏதாவது ஒரு தொழிற்சாலையால் மாசு ஏற்படுகிறது என்றால் குடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.