”2019-ல் வென்ற அளவிற்கு பாஜகவின் வெற்றி இந்த தேர்தலில் இருக்காது” - புள்ளி விவரங்களை அடுக்கும் சமஸ்!

”2019-ல் வென்ற அளவிற்கு பாஜகவின் வெற்றி இந்த தேர்தலில் இருக்காது” - புள்ளி விவரங்களை அடுக்கும் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் சமஸ்!
சமஸ்
சமஸ்PT

பாஜக கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 303 தொகுதி அளவிற்கு இந்த தேர்தலில் வாங்காது என்று கணிக்கிறார் எழுத்தாளர் சமஸ் எழுதியிருக்கிறார். இவரின் கணிப்பிற்கு என்ன காரணம் என்று அவரே சொல்லியும் இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது,

”பாஜக 303 இடங்களில் கூட வெற்றி பெறாது என்ற கருத்தை, கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால நிகழ்வையும் புரிஞ்சுகிட்டா போதும். ஒவ்வொரு கட்சிக்கும் மினிமம் பேஸ் என்று ஒன்று வேண்டும். உதாரணத்திற்கு திமுக, அதிமுகவுக்கு ஓட்டு வங்கி உண்டு. அதற்கு மேல வாங்கவேண்டும் என்றால் ஒருவித அளவிற்குதான் வளரமுடியும், அதற்கு மேல் செல்வது சாத்தியமானது இல்லை.”

சமஸ்
“நாடாளுமன்ற இருக்கைகள் அதிகரிப்பு - ஜனநாயகத்தின் மீதான கத்தி” - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

”இதே கோட்பாடுதான் பாஜகவிற்கும். பாஜகவைப் பொறுத்தவரைக்கும் கடந்தகால வாக்குவங்கி அதை மக்கள் இன்று மறந்துவிட்டார்கள். 1991 20% முதன்முறையாக 120 இடத்தில் வெற்றிபெற்றார்கள். அதன்பிறகு வாஜ்பாய் காலகட்டத்தில் 1998 தேர்தலில் 25.5% வாக்குகளை பெற்று 182 இடங்களில் வெற்றி பெற்றார்கள். இதுதான் பாஜகவின் உட்சபட்ச வெற்றி. அதன்பிறகு 2019 ல் 303 இடங்களை கைப்பற்றினர். ” என்றார்.

இவர் குறித்த விளக்கங்களை தெரிந்துக்கொள்ள வீடியோவை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com