ஊக்க மருந்து பயன்படுத்தியதாக எழுந்த புகார் - மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்

ஊக்க மருந்து பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Bajrang punia
Bajrang puniapt desk

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா ஊக்க மருந்து உட்கொண்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு விசாரணை செய்து வருகிறது. உடற் பரிசோதனை செய்ய பஜ்ரங் புனியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், பஜ்ரங் புனியாவை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

Bajrang punia
Bajrang puniapt desk

இது குறித்து அனுப்பட்டுள்ள நோட்டீஸில், ஊக்க மருந்து எதிர்ப்பு விதிகளை மீறியதாக பஜ்ரங் புனியா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு ஆஜராக அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பஜ்ரங் புனியாவை இதே காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Bajrang punia
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: அமெரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து

இந்நிலையில், அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்ற ஒழுங்குமுறை ஊக்க மருந்து எதிர்ப்பு குழு இடை நீக்கத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டது பேசு பொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com