இந்தியா
ஜம்மு காஷ்மீர்: கட்டுமானப் பணியில் உலகின் மிகப்பெரிய ரயில் பாலம்
ஜம்மு காஷ்மீர்: கட்டுமானப் பணியில் உலகின் மிகப்பெரிய ரயில் பாலம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உலகிலேயே மிக உயர்ந்த ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வரும் 2019-ல் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே சுமார் 1,100 கோடி செலவில் 359 மீட்டர் உயரத்திற்கு ரயில்வே பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாலம், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரமும், 1.3 கிலோ மீட்டர் நீளமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இது உலகிலேயே மிக உயர்ந்த அளவை கொண்ட பாலமாக அமைக்கப்பட உள்ளது. ரயில்வே பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், ரயில் பாலத்தின் பணிகள் 2019ம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.