வரலாற்றுச்சிறப்பு மிக்க டக்கோடா டிசி 3 (dakota dc 3) விமானம் இந்திய விமானப்படையில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கான விழா உத்தரப்பிரதேச மாநிலம் ஹிந்தன் விமானப்படை மையத்தில் நடைபெற்றது. 1946ம் ஆண்டு களமிறக்கப்பட்ட இவ்விமானம் 1947, 1948, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் முக்கிய பங்காற்றியது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இவ்விமானம் இங்கிலாந்தில் சீரமைக்கப்பட்டு அங்கிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் ராஜிவ் சந்திரசேகர் தனது சொந்த முயற்சியில் இவ்விமானத்தை சீரமைத்து இந்திய விமானப்படைக்கு பரிசாகத் தந்துள்ளார். முக்கிய போர்களில் போக்குவரத்துக்காக பயன்பட்ட இவ்விமானம் கடந்த 1978ம் ஆண்டு விமானப்படையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தது.