தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது

தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது

தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது
Published on

உலகின் சிறந்த முதல் 20 பெண்மணிகள் விருதை தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை படைத்ததுடன் மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வித்திட்ட 20 பெண்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கை குழு என்ற அமைப்பு விருது அறிவித்திருந்தது. இதற்கான விழா அமெரிக்காவின் இல்லினாய்ஸில் நடைபெற்றது. பெண்கள் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக தமிழிசை சவுந்தரராஜனுக்கு இவ்விருது வழங்கப்பட்டதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

காணொலி முறையில் நடந்த இந்நிகழ்ச்சியில் புதுவையில் இருந்தவாறு தமிழிசை பங்கேற்று விருது ஏற்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் இவ்விருது பெண்கள் முன்னேற்றத்திற்கான தனது பொறுப்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தெரிவித்தார். குடும்பத்திற்காகவும் சமூகத்திற்காகவும் நாட்டிற்காகவும் உழைக்கும் கோடிக்கணக்கான பெண்களுக்கு விருதை சமர்ப்பிப்பதாகவும் தமிழிசை தெரிவித்தார். தலைசிறந்த 20 பெண்களுக்கான விருதை தமிழிசை சவுந்தராஜனுடன் இணைந்து பெற்றவர்களில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com