எல்லா வயதினரையும் ஈர்க்கும் ஒரு நொறுக்குத்தீனி, சமோசா. சமோசா-சுண்டல் காம்பினேஷனுக்கு மயங்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். இன்று உலக சமோசா தினம் கொண்டாடப்படுகிறது.
உலக சமோசா தினத்தை முன்னிட்டு லக்னோவில் உள்ள சிற்றுண்டி நிலையத்தில் விதவிதமான சமோசாக்கள் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறப்பட்டன.
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில், சமோசா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் சமோசாக்கள், விதவிதமான சுவைகளில் வழங்கப்படுவதால் இக்கடையைத் தேடி வருவதாக வாடிக்கையாளர் பலரும் தெரிவித்துள்ளனர்.