\
சிகிச்சைக்காக இந்தியா வந்த உலகின் அதிக எடை கொண்ட பெண்

சிகிச்சைக்காக இந்தியா வந்த உலகின் அதிக எடை கொண்ட பெண்

சிகிச்சைக்காக இந்தியா வந்த உலகின் அதிக எடை கொண்ட பெண்
Published on: 

உலகின் எடை மிகுந்த பெண்ணாகக் கருதப்படும் எகிப்தின் இமான் அகமது சிகிச்சைக்காக மும்பை கொண்டுவரப்பட்டுள்ளார்.

அலெக்சாண்ட்ரியாவைச் சேர்ந்த இமான், 500 கிலோவுக்கு மேல் எடை கொண்டவர். 38 வயதான இமான், அதிக எடை காரணமாக தனது 13 வயது முதல் படுக்கையில் இருந்து வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கைகள் எழ, மும்பையைச் சேர்ந்த சைஃபி மருத்துவமனை சிகிச்சையளிக்க முன்வந்தது. அந்த மருத்துவமனையில் இமானுக்காக சிறப்பு அறை அமைக்கப்பட்டது. இதையடுத்து அலக்சாண்ட்ரியாவில் இருந்து சரக்கு விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்ட இமான், மருத்துவமனைக்கு லாரியில் கொண்டுவரப்பட்டார். சைஃபி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அறைக்கு கிரேன் மூலம் இமான் கொண்டுவரப்பட்டு, அவருக்கான சிகிச்சை தொடங்கியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com