புகையிலை பயன்பாடு இந்தியாவில் குறைவு ஆனால் தமிழ்நாட்டில் அதிகம்

புகையிலை பயன்பாடு இந்தியாவில் குறைவு ஆனால் தமிழ்நாட்டில் அதிகம்
புகையிலை பயன்பாடு இந்தியாவில் குறைவு ஆனால் தமிழ்நாட்டில் அதிகம்

இந்தியாவில் 2009-10ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2016-17ஆம் ஆண்டில் 6% புகையிலை பயன்பாடு குறைந்துள்ளது.

உலக அளவில் நடத்தப்பட்ட புகையிலை பயன்பாட்டாளர்கள் கணக்கெடுப்புத் தகவலை, ஆங்கில செய்தித்தாளான டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அளவில் 2009-10ஆம் ஆண்டில் 35% ஆக இருந்த புகையிலை பயன்பாடு, கடந்த ஆண்டில் 29% ஆக குறைந்துள்ளது. பல மாநிலங்களில் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் அஸ்ஸாம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தகவலின் படி, அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 53.9% ஆக இருந்த புகையிலை பயன்பாடு, 27.6% குறைந்து தற்போது 25.9% ஆக உள்ளது. இதுதவிர கேரளாவில் 8.7%, ஜம்மு-காஷ்மீரில் 2.9% புகையிலை பயன்பாடு குறைந்துள்ளது. ஆனால் அஸ்ஸாமில் 8.9%, தமிழகத்தில் 3.8% புகையிலை பயன்பாடு அதிகரித்துள்ளது. உலக அளவில் 10ல் ஒருவர் புகையிலை பாதிப்பால் உயிரிழக்கின்றார். மேலும் உலகில் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்களில், 11.2% பேர் இந்தியர்களே என்பதும் தெரியவந்துள்ளது. உலகில் புகையிலை அதிகம் பயன்படுத்துபவர்களில் முதல் நான்கு இடத்திற்குள் இந்தியர்கள் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com