Neeraj Chopra pt desk
இந்தியா
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா!
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஹங்கேரி புடாபெஸ்டில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில், 88.17 மீட்டர் தூரம் எறிந்து தடகள போட்டியில் இந்தியாவின் முதல் உலக சாம்பியன் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற இந்த தொடரில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று இருந்தார். அதற்கு முன்பாக கடந்த 2003 ஆம் ஆண்டு அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றிருந்தார்.
Neeraj Chopra pt desk
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள நீரஜ் சோப்ரா, முன்னதாக ஒலிம்பிக் போட்டியில் தங்கமும், டைமன்ட் லீக் தொடரில் தங்கமும், காமன்வெல்த் தொடரில் தங்கமும்.
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளார். நீரஜ் சோப்ரா பெற்ற வெற்றியின் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.