17 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு தீர்வு; சுரங்கத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட 41 தொழிலாளர்கள்!

உத்தராகண்ட்டில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 நாட்கள் நடைபெற்ற தொடர் மீட்புப்பணியின் பயனாக தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சுரங்கத்திற்கு வெளியே காத்திருக்கும் தொழிலாளர்களின் உறவினர்கள் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆம்புலன்ஸ்கள், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் என அனைவரும் தயார் நிலையில் இருந்தனர். சுரங்கம் அமைந்துள்ள சில்க்யாராவிலிருந்து 30 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டனர். சுரங்கத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com