முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்? இன்று 7வது கட்ட பேச்சுவார்த்தை!

முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்? இன்று 7வது கட்ட பேச்சுவார்த்தை!
முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்? இன்று 7வது கட்ட பேச்சுவார்த்தை!

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே இன்று ஏழாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது

3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லி மற்றும் அதன் எல்லையில் பல்வேறு விவசாய அமைப்பினர் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 38-ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அரசு மற்றும் விவசாய அமைப்புகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கடந்த வாரம் நடந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 4 முக்கிய கோரிக்கைகளில் இரு கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். எனினும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது, குறைந்த பட்ச ஆதார விலை நடைமுறை தொடரும் என்பதை சட்டப்பூர்வமாக உறுதி செய்வது ஆகிய இரு முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக கூறினர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டால் குடியரசு தினத்தன்று டெல்லிக்கு டிராக்டர் மூலம் பேரணியாக செல்லப்போவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும் வரும் 13ஆம் தேதி போகிப் பண்டிகையன்று புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாடப்போவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. போராட்டத்தின்போது நேற்று மேலும் 3 விவசாயிகள் இறந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com