”இந்தியாவில் "பெண்கள்" ஒழுக்கம், ஒருமைப்பாட்டின் உருவமாக இருக்கிறார்கள்” - மத்திய அமைச்சர்

”இந்தியாவில் "பெண்கள்" ஒழுக்கம், ஒருமைப்பாட்டின் உருவமாக இருக்கிறார்கள்” - மத்திய அமைச்சர்
”இந்தியாவில் "பெண்கள்" ஒழுக்கம், ஒருமைப்பாட்டின் உருவமாக இருக்கிறார்கள்” - மத்திய அமைச்சர்

ஒழுக்கம், ஒருமைப்பாடு, தீர்ப்பு மற்றும் வலிமை ஆகியவற்றின் உருவகமாக புதிய இந்தியாவின் கொடியை ஏந்துபவர்கள் பெண்கள் என்று பெண்கள் பொருளாதார மன்ற 84ஆவது உலகளாவிய விழாவில் பேசியுள்ளார் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா.

டெல்லியில் "பெண்கள் பொருளாதார மன்றம்" ( Women Economic Forum) சார்பில் நடைபெற்ற 84வது உலகளாவிய பதிப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ,பல துறைகளில் சாதித்திவரும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் பங்கேற்றனர்.

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட மத்திய அமைச்சர் பேசுகையில், இந்தியாவில் "பெண்கள்" ஒழுக்கம், ஒருமைப்பாடு, தீர்ப்பு மற்றும் வலிமை ஆகியவற்றின் உருவகம், புதிய இந்தியாவின் கொடியை ஏந்துபவர்கள் பெண்கள். நாட்டில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், பல்வேறு துறைகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

தொழில்முனைவு, அரசியல், சமூக சேவை, கலை, கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம், ஆன்மிகம், புதுமை, எழுத்து மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பணிகளைச் செய்யும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது என்று கூறினார்.

விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த "சிந்தியா பாலாசிங்" என்பவருக்கு " Iconic women creating a better world for all" என்ற விருது வழங்கப்பட்டது. மார்க்கெட்டிங் துறையில் சிறந்து விளங்கும் சிந்தியா, இந்த விருது குறித்து கூறுகையில், ”குளோபல் வுமன் ஐகான் விருது பெற்றதை பெருமையாக உணருகிறேன். உலகம் முழுவதுமிருந்து 100 சிறந்த பெண்கள் இந்த விகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள். ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக வாங்கியதில் மகிழ்ச்சி. அனைத்து துறையிலும், பத்து சதவித்தற்கு கீழே தான், தலைமையில் பெண்கள் உள்ளனர். பெண்கள் சாதிக்க கட்டாயம் அவர்களின் பெற்றோரின் பங்கு இருக்கவேண்டும். பெண் குழந்தைகள் அவர்களுக்கு விருப்பமானதை செய்ய பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.

தமிழக அரசு, அனைத்து துறையில் மற்றும் அனைத்து அதிகார அளவிலும் பெண்களுக்கென்ன 30 சதவீத இட ஒதிக்கீட்டை உறுதி செய்யவேண்டும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் எழுத படிக்க மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள், இதனால் பலரும் இது போன்ற ஒரு நிகழ்வில் பேசவேண்டும் என்றால் பயப்புடுகிறார்கள் , குறிப்பாக பெண் மாணவிகள்.

தமிழக அரசு பெண்களுக்கான 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தால் சமுதாயத்தில் பெண்கள் மேலும் முன்னேறி செல்வார்கள்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com