உத்தர பிரதேசத்தில் அரசு மதுபான கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்web
இந்தியா
உத்தர பிரதேசம் | 13 இளைஞர்கள் பலி.. அரசு மதுபான கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்!
உத்தர பிரதேசத்தில் கிராம இளைஞர்களை போதையின் பாதையில் கூட்டிச் செல்லும் அரசு மதுபானக் கடையை அப்பகுதியைச் சேர்ந்த பெண்களே அடித்து நொறுக்கினர்.
Summary
உத்தர பிரதேசத்தில் கிராம இளைஞர்களை போதையின் பாதையில் கூட்டிச் செல்லும் அரசு மதுபானக் கடையை அப்பகுதியைச் சேர்ந்த பெண்களே அடித்து நொறுக்கினர்.
ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கேராகர் கிராமத்தில் நடந்த துர்கா சிலை கரைப்பின்போது, மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் ஆற்றில்மூழ்கி உயிரிழந்தனர். இதேபோல தொடர்ச்சியாக கிராம இளைஞர்களை பாழாக்கிவரும் மதுபானக் கடையைமூடவேண்டும் என கிராம மக்கள் பலகாலமாக கோரிக்கை வைத்துவருகின்றனர்.
ஆனால், அரசுநடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த கேராகர் கிராமபெண்கள் 70க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட அரசு மதுபான கடையை அடித்து நொறுக்கினர். இதில், கடையுடன் சேர்த்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மதுபானபாட்டில்களும் சேதமடைந்தன. இந்தசம்பவம் குறித்து காவல்துறைவிசாரணை நடத்தி வருகின்றனர்