\
மரம் வெட்டுவதை எதிர்த்த பெண் உயிரோடு எரிப்பு

மரம் வெட்டுவதை எதிர்த்த பெண் உயிரோடு எரிப்பு

மரம் வெட்டுவதை எதிர்த்த பெண் உயிரோடு எரிப்பு
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் உள்ள ஒரு கிராமத்தில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராடிய 20 வயது பெண் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜோத்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில், சாலை போடுவதற்காக மரங்கள் வெட்டப்படுவதை லலிதா என்ற இளம் பெண் எதிர்த்தார். மரங்களை வெட்ட அனுமதிக்காமல் அவர் போராடினார். இதையடுத்து அவரை தாக்கிய கிராமத்தினர் லலிதாவின் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்தனர். அவர் இன்று காலை உயிரிழந்தார்.

கிராம தலைவர் ரன்வீர் சிங், வருவாய் அதிகாரி ஓம் பிரகாஷ் ஆகியோர் லலிதாவை கொளுத்தியதாக கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com