இந்தியா
பெண்களின் கூந்தலை வெட்டும் விவகாரம்: குஜராத்துக்கும் பரவியது!
பெண்களின் கூந்தலை வெட்டும் விவகாரம்: குஜராத்துக்கும் பரவியது!
பெண்களின் தலைமுடி மர்மமான முறையில் வெட்டப்படும் சம்பவம் வடமாநிலங்களில் தொடர்ந்து வருகிறது.
டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் நிகழ்ந்து வந்த இந்த சம்பவம் குஜராத்திற்கும் பரவியுள்ளது. வடக்கு குஜராத்தில் உள்ள தாபோய் பகுதியில் மாணவிகள் விடுதியில் தங்கி இருந்த பெண்ணின் தலைமுடி மர்மமாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. யார் இந்தச் செயலில் ஈடுபட்டது, எதற்காக இப்படி செய்தார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் திணறிவருகின்றனர்.

