\
ஆந்திரா: நகராட்சி ஆணையர் மீது மை ஊற்றிய பெண்கள்

ஆந்திரா: நகராட்சி ஆணையர் மீது மை ஊற்றிய பெண்கள்

ஆந்திரா: நகராட்சி ஆணையர் மீது மை ஊற்றிய பெண்கள்
Published on: 

ஆந்திராவில் நகராட்சி ஆணையர் மீது பெண்கள் மை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி நகரில் ராஜாபேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் கசிவு ஏற்படுவதாகவும் அதை சீரமைக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர். நீண்ட நாள்களாக சீரமைப்புப் பணிகள் நடக்காத நிலையில், நகராட்சி ஆணையர் பிரவீன் அஷ்டிகார் சாலையில் ஆய்வுப் பணிக்காக சென்றிருந்தார்.

அப்போது, யுவ ஸ்வாபிமான் கட்சியைச் சேர்ந்த பெண்கள், அவர் மீது மையை ஊற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வெள்ளைச்சட்டை அணிந்து வந்திருந்த ஆணையர் மீது மையை ஊற்ற விடாமல் காவல் துறையினர் தடுத்தபோதும், அவர்களது முயற்சிக்கு பலனின்றி போனது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com