\
புதுச்சேரியில் கருப்பு பூஞ்சைக்கு முதல் உயிரிழப்பு

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சைக்கு முதல் உயிரிழப்பு

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சைக்கு முதல் உயிரிழப்பு
Published on

(கோப்பு புகைப்படம்)

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரியில் தற்போது 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதிசெய்யப்பட்டு தனியார் கண் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீராம்பட்டினம் பவானி நகரைச் சேர்ந்த எழிலரசி என்ற 62 வயது பெண்மணி கொரோனா பாதிப்புடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டதால் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். புதுச்சேரியில் கருப்புப் பூஞ்சை தொற்றால் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இதுவாகும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com