இணையத்தை பயன்படுத்துவதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையே இவ்வளவு இடைவெளியா!

இணையத்தை பயன்படுத்துவதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையே இவ்வளவு இடைவெளியா!
இணையத்தை பயன்படுத்துவதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையே இவ்வளவு இடைவெளியா!

இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பெண்கள் என்று ஆக்ஸ்பாம் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆக்ஸ்பாம் இந்தியா வெளியிட்ட ‘இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2022ன் டிஜிட்டல் டிவைட்(Digital Divide)’ படி, இந்தியப் பெண்கள் மொபைல் போன் வைத்திருப்பது ஆண்களை விட 15 சதவீதம் குறைவாகவும், ஆண்களை விட மொபைல் இணைய சேவைகளைப் பயன்படுத்துவது 33 சதவீதம் குறைவாகவும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

ஆசியா-பசிபிக் நாடுகளில், இந்தியாவின் பாலின இடைவெளி 40.4 சதவீத என்ற மிக மோசமாக நிலை நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், கிராமப்புற-நகர்ப்புற டிஜிட்டல் பிரிவையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. "ஒரு வருடத்தில் குறிப்பிடத்தக்க டிஜிட்டல் வளர்ச்சி விகிதத்தை 13% பதிவு செய்தாலும், கிராமப்புற மக்களில் 31% மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், அதே நேரத்தில் நகர்ப்புற மக்களில் 67% இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்" என்று அறிக்கை கூறுகிறது.

ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2021 வரை நடைபெற்ற இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (CMIE) குடும்பக் கணக்கெடுப்பின் முதன்மைத் தரவை அறிக்கை பகுப்பாய்வு செய்கிறது. மாநிலங்களில், மகாராஷ்டிரா, கோவா, கேரளாவில் அதிக இணைய பயன்பாடு உள்ளதாகவும். பீகாரில் ,சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் என்று குறைவாகவும் இணைய பயன்பாடு உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

"என்எஸ்எஸ் (2017-18) படி, மாணவர்களில் சுமார் 9% மட்டுமே இணையத்துடன் கூடிய கணினியைப் பெற்றுள்ளனர் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களில் 25% எந்த வகையான சாதனங்கள் மூலமாகவும் இணைய அணுகலைப் பெற்றுள்ளனர்" அறிக்கை கூறுகிறது. கோவிட் நோய்தொற்றின் ஊடரங்கின் போது டிஜிட்டல் பயன்பாடு பெரிய அளவில் அதிகரித்து 2021 ஆம் ஆண்டில் 48.6 பில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையிலான பயன்பாடும், பரிவர்த்தனைகளுக்ளையும் இந்தியா பெற்றது.

இருப்பினும், 60% பணக்காரர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், இந்தியாவில் உள்ள ஏழ்மையான 40% விட நான்கு மடங்கு அதிகமாகியுள்ளது.

ஐ.நாவின் மின்-பங்கேற்பு குறியீட்டின் (2022) படி, இணைய அரசாங்கத்தின் மூன்று முக்கிய பரிமாணங்கள், அதாவது ஆன்லைன் சேவைகளை வழங்குதல், தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் மனித திறன் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அளவீட்டில், 193 நாடுகளில் இந்தியா 105 வது இடத்தில் உள்ளது.

SC மற்றும் ST மக்களை விட பொது மற்றும் OBC பிரிவினருக்கு கணினி அணுகல் வாய்ப்பு அதிகம். 2018 மற்றும் 2021 க்கு இடையில் பொதுப் பிரிவினருக்கும் ST க்கும் இடையிலான வேறுபாடு ஏழு முதல் எட்டு சதவிகிதம் வரை அதிகமாக உள்ளது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com