\
51 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

51 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

51 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
Published on

51 வயது பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 51 வயது பெண் ஒருவர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, கொல்லம் நகர காவல் ஆணையர் தெரிவித்தார். முன்னதாக, அந்தப் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக எம்.எல்.ஏ. வின்சென்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் அடிக்கடி நேரில் வந்தும், ஃபோன் மூலமாகவும் அந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது புகார் கொடுக்கப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com