கன்னத்தில் அறைந்த பயணியை திருப்பி அடித்த சுங்கச்சாவடி பெண் ஊழியர் - வீடியோ
தன்னை கன்னத்தில் அறைந்த பயணியை சுங்கச்சாவடி பெண் ஊழியர் திருப்பி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குர்கான் கெர்கி தவுலா சுங்கச்சாவடிக்கு காரில் வந்த பயணி ஒருவர் சுங்க வரி செலுத்தாமல் செல்வதற்கு அடையாள அட்டை ஒன்றை காண்பித்துள்ளார். அப்போது சுங்க வரி வசூலித்து வந்த பெண் ஊழியர் ஒருவர் அந்த அடையாள அட்டை செல்லாது எனவும் சுங்க வரியை செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார் டிரைவர் திடீரென பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்தார். இதை சற்றும் எதிர்ப்பாராத ஊழியர் அவரை திருப்பி அறைந்தார். மீண்டும் அந்த பெண்ணை காரில் வந்த நபர் தாக்கினார். இதைத்தொடர்ந்து அந்த பெண் ஊழியர் வெளியே சென்று அவரை தாக்கினார். அருகில் இருந்தவர்கள் சண்டையை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த குருக்ராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற பயணியை சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் கைது செய்தனர்.