வேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவனை தெருவில் இழுத்து தாக்கிய மனைவி!

வேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவனை தெருவில் இழுத்து தாக்கிய மனைவி!

வேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவனை தெருவில் இழுத்து தாக்கிய மனைவி!
Published on

வேறொரு பெண்ணுடன் கணவர் குடும்பம் நடத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி, அவரை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

தெலங்கானா மாநிலம் ஆழ்வார் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவருக்கு அனிதா என்பவருடன் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கோபாலுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்னரே அனிதாவின் உறவினர்கள் ஊர்ப் பஞ்சாயத்தில் புகார் செய்தார்கள். பிறகும் கோபாலின் லீலைகள் ஓயவில்லை.

சுபாஷ் நகர் என்ற இடத்தில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். அதனை அறிந்ததும், புயலாக மாறினார் அனிதா. விளைவு, தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு, கோபாலும் அந்தப் பெண்ணும் தங்கியிருந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தார். அங்கு அரை நிர்வாணக் கோலத்தில் இருந்த கணவரையும் அந்தப் பெண்ணையும் பார்த்து, ஆவேசமடைந்த அனிதா, சரமாரியாக தாக்கத் தொடங்கினார்.

பின்னர் கணவரை வீதிக்கு இழுத்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் தாக்கத் தொடங்கினார். அதில் கோபால்‌ அணிந்திருந்த டிரவுசர் கழன்று விழும் அளவுக்கு சென்றுவிட்டது. அப்போது அனிதா கீழே விழக்கூடிய நிலையில் இருந்த கணவரின் டிரவுசரை இடுப்பில் சரியாகப் மாட்டிவிட்டு மீண்டும் அடித்தார். இந்த தாக்குதலை அவரது உறவினரே வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com