காசியாபாத்
காசியாபாத்முகநூல்

உ.பி. | ”வெளியே சொல்ல முடியாத அளவுக்கு கணவராலும்..” வரதட்சணை கேட்டு இளம்பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!

காசியாபாத்தில் மருமகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்திய குடும்பம் அவரை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
Published on

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் சேர்ந்த ஒரு குடும்பம், வரதட்சணைக் கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாது, அவரை நிர்வாணப்படுத்தியும், பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த ஜூலை 7, 2022 ஆம் ஆண்டு காஜியாபாத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியுடன் திருமணம் நடக்கிறது. திருமணத்தின்போது வரதட்சணையாக ரூ.10 லட்சமும் ஒரு சொகுசு காரும் கேட்டுள்ளனர். திருமணத்தின்போதே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ரூ 50 லட்சம் வரதட்சணையை கொடுத்தாக கூறப்படுகிறது .

திருமணம் நடந்து முடிந்தது. நாட்கள் கடந்தன. இந்தநிலையில்தான், 2024 ஆம் ஆண்டு இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன்பிறகுதான் விவாகாரம் மோசமடைய தொடங்கியது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கையில், “எனது திருமணத்தின்போது எனது தந்தை ரூ 50 லட்சம் மற்றும் பிற பொருட்களையும் கொடுத்துவிட்டார். மேலும், எனது கணவர் அவரது உறவினர்களின் தூண்டுதலால் குடிபோதையில் என்னை தொடர்ந்து அடிக்க ஆரம்பித்தார். மேலும், இயற்கைக்கு மாறான உறவில் இருக்கும்படி என்னை கட்டாயப்படுத்தினார். இப்படி தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தேன்.

காசியாபாத்
உ.பி. | குடிபோதையில் மாலையை மாற்றிப்போட்ட மணமகன்... அதிரடியாக மணமகள் எடுத்த முடிவு!

பிப்ரவரி 2, 2024 ஆம் ஆண்டு அன்று எங்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்தபிறகு நிலமை மிகவும் மோசமானது. என் மாமியார் கூடுதலாக ரூ .10 லட்சம் வரதட்சணை கேட்டார். ஆனால், என் தந்தையால் ரூ. 3 லட்சம் மட்டுமே கொடுக்க முடிந்தது. இதனால், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதன்பிறகு என்னால் இதை இனியும் தாங்க முடியாது என்று நினைத்தேன்... இந்தநிலையில்தான், எனது சகோதரனிடம் எல்லாவற்றையும் கூறினேன். என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிலிபிட் போலீசார், பெண்ணின் கணவர் உட்பட ஆறு பேர் மீது bns பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com