“பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்” - பெண்ணின் அதிர்ச்சிப் புகார்

“பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்” - பெண்ணின் அதிர்ச்சிப் புகார்

“பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்” - பெண்ணின் அதிர்ச்சிப் புகார்
Published on

ஐதராபாத்தில் தன்னை பல ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் மாணவர்கள் சங்கத்தின் தலைவர்கள், மருத்துவர்கள், நகை வியாபாரிகள், சினித்துறையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் தன்னை பெங்களூரு மற்றும் அமெரிக்காவில் 5,000க்கும் மேற்பட்ட முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

தான் 2009ஆம் ஆண்டில் தெலங்கானாவில் நல்கொன்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும், ஆனால் தனது கணவரின் உறவினர்களே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து தான் கல்லூரி படிப்பை தொடர்ந்ததாகவும், அங்கு பல ஆண்கள் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார். சுமார் 5,000 முறைக்கு மேல் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், தான் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோவை அந்தக் கும்பல் ஆன்லைனில் ஆபாச படமாக பகிர்ந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தன்னைப் போன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அப்பெண் கூறியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், ஆரம்பக் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com